முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கு கொள்ளும் இல்லம் தேடி கல்வி தொடக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கு கொள்ளும் இல்லம் தேடி கல்வி இரண்டு லட்சமாவது மையம் தொடக்க விழா இன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆராஞ்சி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் மூலம் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னோடி திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகிறது. இதனை செயல்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 87 லட்சம் செலவில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 74 இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர், 19 மோட்டார் பொருத்தப்பட்ட நவீன தையில் இயந்திரம் , 46 நவீன கைபேசி 300 தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 17,000 நல வாரிய விபத்து மரணம் உதவித்தொகை ஒரு லட்சம் கல்வித் தொகையை 4000 ஆகியவற்றை முதல்வர் வழங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் கிராமத்தில் ஏழுமலை தமிழரசி தம்பதியரின் மகனான சிவானந்தம் எனும் மனம் வளர்ச்சி குன்றிய பயனாளிகள் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு அரசின் அனைத்து உதவிகளும் கிடைத்திட மறுவாழ்வு பெற்ற நிகழ்வினையும் கண்காணிப்பு மேற்கொள்கிறார்.

ஏழுமலை தமிழரசி இவர்கள் விவசாய கூலி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் மகன் சிவானந்தம் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் கிராமத்தில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் விஷ்ணுகுமார் வயது ( 18) ,இளைய மகள் வர்ஷிகா வயது (7) இவர்கள் கீழ்பெண்ணாத்தூர் ஆரஞ்சு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அரசின் உதவிகள் சென்று அடைகிறதா என்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை 1500- இல் இருந்து 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் உதவித்தொகையாக 15,000 மதிப்புள்ள மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 25 ஆயிரம் வட்டியில்லா கடன் கறவை மாடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்காணும் உதவிகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

Translate »
error: Content is protected !!