தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதில், 14வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைத்த அடிப்படை மானியம் மற்றும் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானியத்தினை விடுவிக்கக் கோரியும், 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றிய போதும் தமிழ்நாட்டிற்கு மானியம் விடுவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அடிப்படை மானிய நிலுவைத் தொகையான 548 புள்ளி 76 கோடி ரூபாயையும், செயல்பாட்டு மானியம் 2 ஆயிரத்து 29 புள்ளி 22 கோடி ரூபாயையும் தமிழகத்திற்கு விரைந்து விடுவிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.