ஆதார் தரவுகளை திருடிய சீன ஹேக்கர்கள்…

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆதார் தரவுகளை சீன ஹேக்கர்கள் சிலர் திருடியதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வசிக்கும் சுமார் 130 கோடி மக்களின் தனிநபர் விவரங்கள் ஆதார் எண்ணின் கீழ் இணைக்கப்பட்டு, மத்திய அரசு சார்ந்த நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட இந்த தகவல்களை சீன ஹேக்கர்கள் சிலர் ஊடுருவி பார்த்துள்ளதாகவும்,  தனிநபர் விவரங்கள் சில கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் குழுமத்தின் தரவுகளையும் கடந்த பிப்ரவரி – ஆகஸ்ட் மாத காலக்கட்டத்தில்  சீன ஹேக்கர்கள் ஊடுருவியதாகவும், ஆனால் தரவுகள் திருடப்பட்டதா என்பது உறுதியாக தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!