மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் சிறு வயதிலேயே சின்ன கலைவாணர் என்ற பெயரை பெற்றுவிட்டதாக நடிகர் பாக்யராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி சாலை சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் மேடையில் பேசிய பாக்யராஜ், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு நாள் தன்னை அதிகாலை நேரம் செல்போனில் அழைத்ததாக குறிப்பிட்டார். அப்போது நடிகர் விவேக் என்னைப் பற்றி பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளதாக கருணாநிதி கூறியதாகவும், பின்னர் பத்திரிக்கையை பார்த்தபோது, அதில் விவேக் என்னுடன் எவ்வளவு நெருக்கமாக உள்ளார் என்பதை அறிந்து கொண்டதாகவும் பாக்யராஜ் மகிழ்ச்சி தெரிவித்தார்.