கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைப்பெற்றது- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜை, தீபாராதனை, சமய சொற்பொழிவு, சுவாமி வீதி உலா, மண்டகப்படி பக்தி இன்னிசை ஆகியவை நடந்தது.
9ம் நாள் திருவிழாவான இன்று திருத்தேரில் சுவாமி எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைப்பெற்றது, இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு பெருமானின் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.