கோவையில் சித்திரைத் திருநாள் விஷு கனி கொண்டாட்டம்

தமிழ் மாதம் சித்திரை மாதத்தின் முதல் நாள் சித்திரை திருநாளாகவும், சித்திரை கனி, தமிழ் புத்தாண்டு என தமிழர்களால் கொண்டாடபடுகிறது. இதேபோல் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மலையாள மொழி பேசும் மக்களால் விஷு கனி என கொண்டாடப்படுகிறது. இதில் இரவிலேயே அவரவர் வீடுகளில் மா, பலா வாழை உள்ளிட்ட பல்வேரு பழங்களை இறைவனுக்கு படைத்து அதனை காலையில் கண்விழித்தவுடன் அக்கனிகளை கண்டதுடன் முகத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் கண்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதிகம் இந்த நடைமுறையை பின்பற்றி கோவையில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் மகிழ்ச்சியுடன் விஷுக்கனி திருநாளை கொண்டாடினர். விஷுக்கனியை முன்னிட்டு கோவையில் பிரசித்த பெற்ற சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் விஷுக்கனி திருநாள் விழா அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் அஷ்டா பிஷேகத்துடன் தொடங்கியது. பின்னர் கனிகளால் மூலவர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கொலு மண்டபத்தில் அனைத்து வகை பழங்கள் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சித்திரை விசு தினத்தன்று சபரிமலையில் கைநீட்டம் வழங்குவது போலவே இங்கு பக்தர்களுக்கும் கைநீட்டம் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஷீபா கூறுகையில் கடந்த் இரண்டு ஆண்டுகளாக கொரானா காரணமாக உற்றார் உறவினர்களுடன் பல்வேறு பண்டிகைகள் மற்றும் விழாக்கள் கொண்டாடப்பட முடியாமலிருந்த நிலையில் இந்த ஆண்டு மகிழ்ச்சியுடன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்து வழிபடுவதுடன் நண்பர்கள் உற்றார் உறவினர்களை சேர்ந்து பிடித்த இனிப்பு, கார பலகாரங்களை பகிர்ந்து கொண்டாட இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் திறளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.

Translate »
error: Content is protected !!