சென்னை கோட்டூர்புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2021 – 2022ஆம் ஆண்டுக்கான 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி விவரம்
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் எழுதினர், அதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர், மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் ஆகும்.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் , இவர்களின் தேர்ச்சி சதவீதம் (90.07%)ஆகும். மாணவியர் 4,27,073 (94.38%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,94,920 (85.83%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடவாரியாக 100 மதிப்பெண் பெற்றவர்கள்.
தமிழ் 1 ( 94.84% தேர்ச்சி)
ஆங்கிலம் 45 (96.18% தேர்ச்சி)
கணிதம் 2186 (90.89% தேர்ச்சி)
அறிவியல் 3841 (93.67% தேர்ச்சி)
சமூக அறிவியல் 1009 (91.86 % தேர்ச்சி)
மாணவர்கள் 88.47 சதவீதம்
மாணவிகள் 95.31 சதவீதம்
மொத்த தேர்ச்சி சதவீதம் 91.86
மாவட்ட வாரியாக அதிக தேர்ச்சி விகிதம் முதல் மூன்று இடங்களை கன்னியாகுமரி, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் உள்ளது .
1.கன்னியாகுமரி 97.22 பெரம்பலூர் சதவீதம்
2.பெரம்பலூர் 97.15 சதவீதம்
3.விருது நகர் 95.96 சதவீதம்
குறைந்த தேர்ச்சி விகிதத்தை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 79.87 சாதவீதமே தேர்ச்சி உள்ளது.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விவரம்
தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,06,277ஆகும் , அதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,21,622 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 3,84,655 ஆகும்
தேர்ச்சி பெற்றவர்கள் 7,55,998 (93.76%)
மாணவியர் 4,06,105 (96.32%) தேர்ச்சி அடைந்துள்ளனர்
மாணவர்கள் 3,49,893 (90.96%) தேர்ச்சி அடைந்துள்ளனர்
மாணவர்களை விட மாணவியர் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.