நீர்நிலைகளில் கந்தகப்பொருட்கள் கலந்துள்ளதா என்பது குறித்து நீர் மாதிரிகள் சேகரிப்பு

 

நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் கந்தகப்பொருட்கள் கலந்துள்ளதா என்பது குறித்து நீர் மாதிரிகள் சேகரித்து சிறப்பு வல்லுநர் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், சீர்காழி தொகுதியில் நிலத்தடி நீர் பகுப்பாய்வு மேற்கொண்டதில், கந்தகப் பொருட்கள் கலப்படம் இல்லை என கூறினார்.

இருப்பினும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறிய அவர், இதுபோன்ற பணிகளை கண்காணிக்கவே காலநிலை மாற்ற இயக்கத்தை உருவாக்கி உள்ளதாகவும் விளக்கினார்.

 

Translate »
error: Content is protected !!