மதக்கலவரம் தூண்டும் விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இரு மதத்தினரிடையே கலவரம் ஏற்படுத்தும் வகையிலும், உயர்நீதிமன்ற நீதிபதிகளை அநாகரிகமாக பேசியும், சமூக வலைதளத்தில் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “தைரியமா? விடியலுக்கா?” என பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி கேள்வி எழுப்பி இருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சவுதாமணி மீது குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.