மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளன.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையில் கடந்த மாதம் 20-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய பா.ஜ.க.-அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனவே மேலும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று முதல் 30-ந் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில், தமிழகத்தில் இன்று தி.மு.க. தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.