அரசியல் நோக்கத்திற்காக சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போரின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக கூறினார்.
மேலும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமஉரிமை வழங்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டிய அவர், வலைதளங்கள் வாயிலாக சமூகத்தினரிடையே வெறுப்புணர்வு தூண்டும் பேச்சுகள் பரபரப்பப்படுவதாக தெரிவித்தார். இதனை வலைதள நிறுவனங்கள் கண்டும் காணாமல் இருப்பதோடு, அதன் மூலம் லாபமும் ஈட்டி வருவதாகவும், இந்திய தேர்தல் அரசியலில் வலைதளங்களின் தலையிட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு சோனியா வலியுறுத்தினார்.