காங்கிரஸ் எம்.பி- ராகுல் காந்தி மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு

 

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிப்பதே இல்லை என காங்கிரஸ் எம்.பி- ராகுல் காந்தி குற்றம்சாடியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 12 ஆம் அமர்வான இன்று விவசாயிகள் மீது காரை ஏற்றிய விவகாரத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி- ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிப்பதே இல்லை என்றும் இதன் காரணமாகவே அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதாகவும், இதில் நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்டு பேச அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால் அனுமது மறுக்கப்பட்டதாகவும் ராகுல் சாடினார். இதனிடையே, லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவம் விபத்து அல்ல, அது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி எனக் சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

 

Translate »
error: Content is protected !!