காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் விரைவில் நடத்தப்படும்…

கபில் சிபலின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் விரைவில் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்திருந்தார். அதாவது காங்கிரஸ் கட்சி முடிவுகளை யார் எடுக்கிறார் என தெரியவில்லை எனவும் காங்கிரசில் தவறுகளை ஆராய உடனடியாக காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து கபில் சிபல் வீட்டு முன்பு கூடிய காங்கிரஸ் தொண்டர்கள் அவரது விமர்சனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அவரது கார் கண்டாடியையும் அடித்து நெருக்கினர். இது காங்கிரஸ் வட்டாரம் மட்டுமின்றி பிற கட்சியினரிடத்திலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கபில் சிபலின் ஆலோசனையை ஏற்ற காங்கிரஸ் மேலிடம் விரைவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!