சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி

 

சென்னையில் மழைக்காலத்திற்கு முன்பாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி துணை மேயர் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் சென்னை துணை மேயர் மகேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான சாலை அமைத்தல், பூங்காக்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சனைகள், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் மகேஷ்குமார், இப்பகுதி மக்களின் குறைகளை கேட்டோம் என்றும் விரைவில் சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.

சென்னையில் மழைக்காலத்திற்கு முன்பாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் மாழைக்காலத்திற்கு முன்பாக பணிகள் முடிக்கப்பட்டு மழைநீர் தேங்காத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

 

Translate »
error: Content is protected !!