தொடர்ந்து நான்காவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில் அதிமுக அலுவலகத்தில் நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை ஏற்படுத்திட வேண்டும் என பேசப்பட்ட நிலையில் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது. அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை தொடர்ந்து கட்சியின் பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் சந்தித்துப் பேசி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பல கட்டங்களாக ஒற்றை தலைமை அமைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் அந்தப் பேச்சுவார்த்தையில் பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூட பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமிக்க கூடாது என தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில் திடீரென ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எதற்காக வந்தது என எனக்கு புரியவில்லை எனவும் அதிமுகவை பொருத்தமட்டில் தொண்டர்கள்தான் பொதுச் செயலாளர்களை தேர்ந்தெடுப்பார்கள் அப்படி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச் செயலாளராக இருப்பார் என குறிப்பிட்டார். எனவே ஒற்றை தலைமை குறித்து கருத்து பரப்பியவர்கள் மீது எடப்பாடிபழனிசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பொதுக்குழுவில் தனது ஒப்புதல் இல்லாமல் தீர்மானம் போட முடியாது எனவும் 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அழைத்து விவாதித்து எடுக்கும் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அதேசமயம் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியால் தான் ஒற்றை தலைமை தொடர்பான கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகள் பெரிதாக குறிப்பிட்ட அவர் தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூடவும் இது தொடர்பாக ஆலோசனையில் ஈடுப்பட தயார் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நான்காவது நாளாக வீன் வே சாலையிலுள்ள ஓ பன்னீர்செல்வம் இல்ல முன்பு பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.