உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, லக்னோவில், மாநில டிஜிபி மற்றும் உள்துறை செயலர்களுடன் இந்திய தேர்தல் ஆணையக்குழு ஆலோசனை நடத்தியது. உத்தரபிரதேசம், உத்தரகண்ட் , பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவுள்ளது. இதற்கான முன்ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தலைமையிலான 13 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தநிலையில், 3 நாள் பயணமாக லக்னோ சென்றுள்ள அந்த குழு, தேர்தல் குறித்து மாநில டிஜிபி மற்றும் உள்துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஒமிக்ரான் பரவி வரும் சூழலில் சுகாதார விதிமுறைகள் மற்றும் சட்டம் ஒழுங்கை கடைபிடித்து தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.