கண்களில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டாமென அகர்வால் மருத்துவமனை டாக்டர் பரிந்துரைத்துள்ளார். பொதுவாகவே தீபாவளியின்போது கண் காயங்கள் அதிகம் ஏற்படும். அப்படியிருக்கையில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கண்களில் அரிப்பு இருந்தால் விரல்களால் அதைத் தேய்க்கக்கூடாது. அடிக்கடி நீரைக் கொண்டு கண்களை அலசிக்கொள்ளலாம்.