கொரோனா பேரிடர் காலத்தில் வணிகர்களுக்கு ஒரு கடுகளவு கூட மத்திய அரசு கடன் கொடுக்கவில்லை என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் விக்கிரமராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கம் மற்றும் பரமக்குடி வியாபாரிகள் சங்கம் இணையும் விழா பரமக்குடியில் தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி வரியை மீண்டும் உயர்த்துவதாக மத்திய அரசு பயம் காட்டி வருகிறது என்ற அவர், ஜிஎஸ்டி வரி உயர்வால் தற்போது கண்ணுக்கு தெரியாமல் ஒரு சோப்பிற்கு ரூபாய் 11 முதல் 12 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் சட்டவிதி மீறலுக்கு தள்ளப்பட்டு சாமானிய வணிகர்களை ஒன்றில்லாமல் செய்யக்கூடிய வகையில் செயல்படுகிறது. அவர்களை எதிர்த்து அகில இந்திய வணிகர் சங்கம் தொடர் போராட்டங்களை அறிவித்து இருக்கிறது. இது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை தலைமை நிர்வாகிகளுடன் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
கொரோனா பேரிடர் காலத்தில் வணிகர்களுக்கு ஒரு கடுகளவு கூட மத்திய அரசு கடன் கொடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.