உலகளவில் 24.60 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 40 லட்சமாக அதிகரித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 40 லட்சத்து 86 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 79 லட்சத்து 71 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22 கோடியே 11 லட்சத்து 56 ஆயிரத்து 154 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 49 லட்சத்து 58 ஆயிரத்து 940 பேர் உயிரிழந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!