பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரன்சி பயன்படுத்தப்படலாம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து நிறைந்தது எனவும், பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரன்சி பயன்படுத்தப்படலாம் எனவும் கூறினார்.

மேலும், இதற்கு ஒரே ஒரு தீர்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விதிகளை ஒழுங்குப்படுத்துவதே ஆகும் எனவும், கிரிப்டோகரன்சி ஒரு நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தால் அது சாத்தியமில்லை எனவும், மிகப்பெரிய அளவில் ஒழுங்குமுறை விதிகள் இருந்தால் மட்டும் கிரிப்டோ கரன்சி முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!