நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தியாவில் கொரொனா காரணமாக 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. துபாயில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்து முதலில் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டு பிளிசிஸ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற, மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட், 88 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைப்போல ஜடேஜாவும், பிராவோவும் சிறப்பாக விளையாடினர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.