லடாக் எல்லையில் சீன ஹேக்கர்கள் சைபர்  தாக்குதல்

 

லடாக் எல்லையில் உள்ள மின்வேலிகளை குறிவைத்து சீன ஹேக்கர்கள் சைபர்  தாக்குதல் நடத்தியிருப்பதாக உளவு நிறுவனமான Recorded Future அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஒரு மாத காலமாக இந்தியா-சீனா எல்லையில் உள்ள மின்வேலிகளுக்கு விநியோகிக்கப்படும் 7 மின்சார அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடைபெற்றதாக கூறியுள்ளது.

இதனை சீன அரசின் உதவியுடன் அந்நாட்டு ஹேக்கர்கள் நிகழ்ந்தியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள Recorded Future நிறுவனம், இதில் ஒரு மின் விநியோக அமைப்பை ஏற்கனவே RedEcho என்ற ஹேக்கர்ஸ் குழு ஹேக் செய்திருந்ததாகவும், முக்கிய உள்கட்டமைப்பை பற்றிய தகவல் சேகரிப்புக்காக அல்லது எதிர்காலச் செயல்பாட்டிற்கான முன்னிலைப்படுத்தலை உறுதி செய்வதற்காக   இம்முயற்சி நடைபெற்றிருக்கக் கூடும் என்றும் கூறியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!