தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது உணவு தயாரிக்கும்போது கறி கெட்டுப் போய் இருப்பதை கண்டு திருமண விட்டார்கள் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தது. இதன் பின்னர், திருமண நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட கறியை சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர்.ஆர்.பிரியாணி தயாரிக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் இது தொடர்பாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இது ஆன்லைன் மூலமாக கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து வாங்கப்பட்ட இறைச்சிகள் என தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட இறைச்சிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ், கெட்டுப்போன இறைச்சி வந்ததாக எங்களுக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. சேலம் ஆர்ஆர் பிரியாணி மூன்றரை டன் இறைச்சி சோமொடோ நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.
இந்த சோமட்டோ நிறுவனம் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து திருமண நிகழ்ச்சிக்கு சப்ளை செய்துள்ளனர். இது கறியை சமைக்கும் போது கெட்டுமோனது என தெரியவந்தது. உடனடியாக மீதம் உள்ள கறியை சென்னையில் உள்ள சேலம் ஆர்.ஆர்.பிரியாணி தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது.
. இதன் பின்னர் சோதனை செய்த போது கறி கெட்டுபோயி உள்ளது. இதனை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளோம். கெட்டுப்போன கறி குறித்து விவரத்தை சோமட்டோ நிறுவனம் தான் சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்