நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரி சஸ்பென்ட்

நேரடி கொள்முதல் நிலையத்தில் அதிக கமிஷன் வாங்கியாதால் அந்த நிலைய அதிகாரியை மாவட்ட ஆட்சியர் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியடுத்த வளத்தியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.

கிராமப்புறங்களில் விளைவிக்கப்படும் நெல் மூட்டைகள், தானியங்கள் நேரடியாக விற்பனை செய்வதற்காக ஏதுவாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நேரடி கொள்முதல் நிலையம் பணிபுரிந்த கண்காணிப்பாளர் துரைமுருகன் என்பவர் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், தமிழ்நாடு நுகர் பொருள் வானிப கழக
மண்டல மேலாளர் வளத்தி நேரடி கொள்முதல் கண்காணிப்பாளர் துரை முருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

புதிய கண்காணிப்பாளராக கங்காதரன் என்பவரை நியமித்து விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

Translate »
error: Content is protected !!