கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் திமுக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதும் 5 சவரன் வரையிலான தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, தற்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 31-03-2021 -ம் நாள் வரை நிலுவையில் இருந்த ரூ .6000 கோடி நகைக் கடன்களை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 16 இலட்சம் நகைக் கடன்தாரர்கள் பயன் பெறுவார்கள் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.