பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார் ஜோகோவி

 

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் அல்ஜாஸ் பெடேனை (சுலோவெனியா) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதிக்கு முந்தய சுற்றான 4-வது சுற்றில் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை நேற்று எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் நாளை நடைபெறவுள்ள காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!