நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி

 

 

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளதால், அதிமுக தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தலில் படுதோல்வியை சந்திக்கிறது. நேற்று இரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு உடனுக்குடன் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தேர்தல் நடவடிக்கைகள் இன்று  முடிவுபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நிகழ்ச்சி மார்ச் 2ம் தேதி  நடைபெறும். இதைத்தொடர்ந்து, மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல்கள் மூலம் மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!