3ம் உலக போருக்கு வழிவகுக்க வேண்டாம்

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து, 3ம் உலக போருக்கு வழிவகுக்க வேண்டாம் என பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூக்கஷென்கோ எச்சரித்துள்ளார். உலக நாடுகளின் எச்சரிப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் கடும் ஆத்திரத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவின் செயலை முட்டுக்கட்டை இடும் விதமாக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

இந்தநிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் பெலாரஸ் அதிபர் அலெக்ஸ்சாண்டர் லூக்கஷென்கோ, உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து 3ம் உலக போருக்கு  ரஷ்யாவை தள்ளுவதாக  கூறியுள்ளார். இது மிகப்பெரிய அணு ஆயுத தாக்குதலுக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ள அவர், சிந்தித்து செயல்பட உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!