திராவிடத்தை கருத்தியல் அடையாளமாக பார்க்க வேண்டும் – திருமாவளவன்

 

திராவிடத்தை மொழியின், இனத்தின், நிலத்தின், அடையாளமாக இல்லாமல் கருத்தியல் அடையாளமாக பார்க்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கவிஞர் கு தென்னவன் எழுதிய கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்று விசிக தலைவர் திருமாவளவன் நூல்களை வெளியிட்டார்.

பின்னர் மேடையில் பேசிய அவர்,

நூலை வெளியிட வாய்ப்பு அளித்த கவிஞர் தென்னவனுக்கு நன்றி. அண்ணா, கலைஞர், நாவலர் உள்ளிட்டவர்களுக்கு கருத்தியல் பெட்டகமாக இருந்தவர் பெரியார் என்றார். பெரியார் கருத்துக்கள் அரசியல் பண்பாடு, திரைத்துறை தளங்களில் பலரால் எடுத்து செல்லப்பட்டது போல அம்பேத்கர் கருத்துக்களை எடுத்து செல்லப்படவில்லை என கூறினார்.

மேலும் புரட்சியாளர் அம்பேத்கருக்கு இணையான தலைவர் இரட்டைமலை சீனிவாசன். ஆனால் அம்பேத்கரையே தலைவராக ஏற்றுக்கொண்டவர் இரட்டைமலை சீனிவாசன் என்றார். ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு முன்னர் பறையர் என்றே அனைத்து தீண்டத்தகாத மக்களும் கருதப்படுவார்கள். அனைவருக்குமாக குரல் கொடுக்க நினைத்தவர் தான் இரட்டைமலை சீனிவாசன் என கூறினார். திராவிடத்தை மொழியின், இனத்தின், நிலத்தின், அடையாளமாக இல்லாமல் கருத்தியல் அடையாளமாக பார்க்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!