முழு வீச்சில் நடைபெறும் ஏரிகளை தூர்வாரும் பணிகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 1352 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. முன்னதாக தூர்வாரும் பணிகளும் வேகமாக செய்து முடிக்கப்பட்டிருந்தது. பருவமழை இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏரிகளில் நீர் கொள்ளளவு விவரத்தை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 14,138 ஏரிகளில் 1352 ஏரிகள் 100 என்கிற முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், அதிகபட்சமாக மதுரையில் 423 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேப்போல், 2024 ஏரிகள் 76 முதல் 99% வரை நிரம்பியுள்ளதாகவும், 1610 ஏரிகள் 51 முதல் 75% வரை நிரம்பியுள்ளன என்றும் 2517 ஏரிகள் 26 முதல் 50% வரை நிரம்பியுள்ளதாகவும் நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!