துரை வைகோவிற்கு தலைமைக் கழகச் செயலாளர் பதவி..

மதிமுகவில் துரை வைகோவிற்கு தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக மதிமுக தலைமைகழகம் முடிவு செய்துள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் கட்சியின் தலைமையகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு மதிமுகவில் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது . இதற்கான நடைபெற்ற வாக்கெடுப்பில் 104 வாக்குகள் துரை வைகோவிற்கு ஆதரவாகவும் , இரு வாக்குகள் எதிராகவும் பதிவானது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, 2 ஆண்டுக்கு முன்பே துரை வைகோ அரசியலுக்கு வரமாட்டார் என கூறினேன்.ஆனால்  எனக்கே தெரியாமல் அவர் கழகப் பணி ஆற்றி வந்துள்ளார். தற்போது அவர் கட்சிக்கு வர அனைவரும் விரும்புவதால் அவருக்கு தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பு வழங்கவுள்ளதாக கூறினார்.

Translate »
error: Content is protected !!