ஜம்மு காஷ்மிர் மாநிலம், லடாக் மற்றும் கார்கில் பகுதியில் இன்று (செப்டம்பர் 19) காலை 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது, 4.3 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சில தினங்களுக்கு முன்னர் காஷ்மிரில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.