பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம்

 

பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுயிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பணவீக்கத்துக்கும் இம்ரான்கானின் தவறான கொள்கைகளே காரணம் என எதிர்ப்பு வலுத்து வருகிறது.

முஸ்லீம் லீக் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 எம்பிக்கள், இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த 8ம் தேதி தாக்கல் செய்தனர். அவரது சொந்த கட்சியை சேர்ந்த 24 எம்பிக்கள், இம்ரான்கானுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர்.

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 28ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த தீர்மானத்தை முறியடிப்பது குறித்து, தமது அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் இம்ரான்கான் ஆலோசனை நடத்தினார். இதன்முடிவில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாட இம்ரான்கான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!