ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் 6 மற்றும் அக்.9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது 2 கட்டங்களாக நடந்தது. இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்நிலையில், ஆங்காங்கே ஒரு சில வாக்கு எண்ணும் மையங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் வாக்கு எண்ணிகையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட திரிசூலம் பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர், யூனியன் கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட்ட சத்திய நாராயணன், சரஸ்வதி, முத்துக்கனி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடத்தி வருகிறது. முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும், முறைகேடு நடந்தால் தேர்தல் ஆணையம் முறையான நடக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் 2 வராங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.