மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – சென்னை பல்கலைகழகம்

 

சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது இதனை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யும் வகையில் சென்னையில் தொடர்ந்து 3 மாதங்களாக இன்று நான்காவது முறையாக வேலை வாய்ப்பு முகாம் போடப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கண் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதவர், சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர் என எல்லா வகையான மாற்றுத்திறனாளிகளும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்போர்  குறைபாடை பொருத்து அவர்களுக்கான வேலை வாய்ப்பானது வழங்கப்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட கலந்துகொள்ளும் ஊனமுற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 23 தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பினை வழங்குகிறது குறிப்பாக ஐசிசிஐ  வங்கி, kotak Mahindra வங்கி, Accenture,  TVS,  Infysos, sundaram Clayton, Holiday in உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கிறது.

 

Translate »
error: Content is protected !!