தமிழக சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம்-1982-ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
அதன்படி, அந்த சட்டத்தில் வேந்தர் (ஆளுநர்) என்ற சொல்லுக்கு பதிலாக அரசு என்ற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும்.
குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்தது.