பயண நேரம், பாதுகாப்பு சோதனை, உணவு வசதி போன்ற அனைத்து சேவைகளையும் பெற புதிய செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கொரோனாவுக்குப் பின் சென்னையில் விமான சேவையை சகஜ நிலைக்கு கொண்டு வர எடுத்த நடவடிக்கையால் உள்நாட்டு முனையத்தில் 95 சதவீதமும், பன்னாட்டு முனையத்தில் 60 சதவீதமும்இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இரண்டாயிரத்து 200 கார்கள் நிறுத்தும் அளவிற்கு மல்டிலெவல் கார் நிறுத்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சினிமா மாலும் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.