விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு

 

விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று நமக்கு முதல்கட்ட வெற்றி கிடைத்து இருக்கிறது என்றும், இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிவைக்க முடியாது; குடியரசு தலைவருக்குதான் அனுப்பி வைக்க வேண்டும் என ஆளுநர் குறிபிட்டதாகவும் தெரிவித்தார்.

திருமண விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு, பொன்முடி, அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி. ஆர் பாலு,  தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!