தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் தொல்லியல் துறை மற்றும் நில அளவை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டு வருகின்றனர் அதன் நேரடி காட்சிகளை தற்போது காணலாம்.
1967 – ஆம் ஆண்டு ஜூலை 18 -ஆம் தேதி சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனை ஒட்டி இன்று ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது.
நில அளவைத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள வரைபடக் கண்காட்சியில் பண்டைய சென்னை மாகாண வரைபடங்கள்,மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு பிறகான சென்னை மாநில வரைபடங்கள்,தற்போதைய தமிழ்நாடு மாநில வரைபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின்சார்பாக, தமிழ்நாடு நாள் வரலாறு குறித்து சிறப்பு மலர் வெளியிடப்பட உள்ளது.
தொல்லியல் துறை சார்பில் மூன்று நாட்கள் தொல்பொருட்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.