மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீதான தடை நீட்டிப்பு

இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 15-ந்தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் கடந்த 28-ந் தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து உத்தரவிட்டது.

பின்னர் இந்த தடை இன்றைய தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதே வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இருவரும் வரும் 11-ந்தேதி வரை நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!