தலைமைச் செயலாளர் அறிவித்த 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தேசிய ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றுவரும் ரத்ததான முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா நோய்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த ரத்த தான முகாம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இரத்தம் தேவைப்படுவதால் மீண்டும் இந்த ரத்த தான முகாம் நடத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், அக்டோபர் மாதமும் ஒன்றரை கோடி அளவுக்கு மேல் தடுப்பூசி போடப்படும் என்கின்ற அளவில் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் தலைமைச் செயலாளர் அறிவித்த 13 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.