பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப அச்சம் – நடிகை ஜெனிபர் லோபஸ்

 

அமெரிக்க பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பயமாக உள்ளதாக பிரபல பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ் அச்சம் தெரிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுபோன்ற வன்முறைகளைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெனிபர் லோபஸ் தன் இணையப்பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். நெருக்கமானவர்களை, முக்கியமாக குழந்தைகளை நினைத்து வேதனையடைவதாகவும், அவர்களை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!