நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 24.45 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு உணவு பொருட்கள் வீணடிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் உணவுப் பொருள்கள் வீணடிக்க படுவது அதிகரித்துள்ளதா என்பது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய நுகர்வோர் துறை இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி, உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசு கணக்கீடு செய்துள்ளதாகவும் அதன்படி கடந்த ஆண்டு 2.77 கோடி மதிப்புள்ள ஆயிரத்து 850 டன் உணவு பொருட்கள் வீணடிக்கப் பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

தமிழகம், மேற்குவங்கம், நாகாலாந்து, டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 20 மாநிலங்களில் 24.45 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 ஆயிரத்து 432 டன் உணவு பொருட்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், மேலும் கடந்த ஆண்டு தமிழகத்தில் உணவு பொருட்களை வீணடிப்பது பூஜ்யமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!