காரைக்காலில் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த கலைமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஆழ்கடலுக்கு மீன் பிடித்து கொண்டு மீண்டும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தது. இந்த நிலையில், துறைமுகத்தில் நின்ற விசைப்படகில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், 20 லட்சம் மதிப்பிலான எஞ்சின் மற்றும் விசைப்படகில் உள்ள முக்கிய பகுதிகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.