கடலூர் மாவட்டம் முழுவதும் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொடர்ந்து மீன்வளத்துறை எச்சரித்து வருகிறது. அப்படி மீறி கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது காவல்துறை துணையுடன் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுருக்குமடி வலை வைத்திருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மீன்வளத்துறை அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கியது அப்படி அப்புறப்படுத்தாத பல கிராமங்களில் காவல்துறையுடன் சென்று சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கடலூர் மாவட்டம் நல்லவாடு மீனவ கிராமத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து அந்த சுருக்குமடி வலை படகு கரைக்கு வராமல் கடலில் பிடிக்கப்பட்ட மீனை பைபர் படகின் மூலம் கரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முயற்சித்த போது மீன்வளத்துறை அதை கண்டறிந்து அந்த மீனை பறிமுதல் செய்தனர்.
அதே சமயத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்து கடலில் இருந்து கரைக்கு கொண்டுவர துணைபுரிந்த இரண்டு பைபர் படகைகளையும் கண்டுபிடித்து அதன் பதிவை ரத்து செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மீனை ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு பொது ஏலம்விட்டு அரசின் கஜானாவில் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சுருக்குமடி வலை தடை செய்யப்பட்டவளை அதிக திறன் கொண்ட படகு பயன்படுத்தக் கூடாது என மீன்வளத்துறையும் காவல்துறையும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது கடற்கரையை சுற்றி பல இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.