மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் அவர்,
மீனவர்களுக்கான வங்கி தொடங்கப்பட உள்ளது. இதற்கான குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம், 1 லட்சத்து 75 ஆயிரம் மீன் பிடி மீனவர்கள் உள்ளனர், அவர்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் இந்த வங்கியில் செலுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், விசைப்படகுகளில் மீனவர்களின் பாதுகாப்பிற்காக ட்ராண்மிட்டர் பொருத்த ISROவிடம் ஆய்விற்கு அளித்துள்ளோம், அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
மேலும், தூண்டில் வளைவுகள் தேவையான இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது, அதேப்போல் துறைமுகம் தேவைப்படும் இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம், விரைவில் பணிகள் தொடங்கப்படும், நாட்டு நாய்களை பாதுகாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது, அதேப்போல் உள்நாடு மாடு இணங்களையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, 1089 மருத்துவர்களை தமிழகம் முழுவதும் நியமித்துள்ளோம், கோமாரி நோய்க்கான தடுப்பு மருத்து கண்டுபிடிக்க மத்திய அரசின் அனுமதியுடன், இராணிப்பேட்டையில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது என கூறினார்.