தீபா – தீபக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது ஜெயலலிதா இல்லம் – அதிரடி உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது.

அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி வழக்குகளின் மீதான தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடை ஆக்கியது செல்லாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், வேதா நிலையத்தை 3 வாரங்களில் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் வேதா நிலையம், மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு எனவும் சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Translate »
error: Content is protected !!