முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

திமுக நிர்வாகியை தாக்கியதாக கைதான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை நாளைக்கு ஒத்தி வைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடந்தது.

அப்போது, சென்னை மாநகராட்சியின் 49வது வார்டுக்கு உட்பட ராயபுரம் பகுதியில், கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்ற நபரை தாக்கியதற்காக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில், ஜெயக்குமார் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!