மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்பி நத்தம் வீரபெருமாள்புரம் இடையே குண்டாறு அமைந்துள்ளது இதில் பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர் அதனடிப்படையில் எஸ்பி நத்தம் வீரப்பெருமாள்புரம் இடையே குண்டாற்றின் குறுக்கே ரூபாய் 3.5 கோடி மதிப்பீட்டில் ஒரு பாலமும் அதனருகே 1.5 கோடி மதிப்பீட்டில் மற்றொரு பாலமும் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது இதனை முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார் நேரில் பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார் தொடர்ந்து இப்பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணையை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான S.கிருஷ்ணாபுரம் கண்மாய் பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் வரத்து அதிகளவில் வருவதால் பாலம் அமைக்க கோரிக்கை வைத்தனர் இதனைத்தொடர்ந்து இப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் *ஆய்வுப் பணியின் போது விவசாயி ஒருவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை பார்த்து எம்ஜிஆர் பாடலான அன்னமிட்ட கை என்ற பாடலை பாடி அசத்தினார் அவரை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கட்டித்தழுவி நன்றி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆவல்சூரன்பட்டியில் ரூபாய் இருபத்தி மூன்று லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பின்னர் தென்னமநல்லூர் கிராமத்தில் ரூபாய் 14 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பின்னர் கலி குடியில் 1.5 கிலோ மீட்டர் தூரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 1.1 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கள்ளிகுடி வட்டாட்சியர் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் மீனவர் அணி மாவட்டசெயலாளர் சரவண பாண்டி மாவட்ட பொருளாளர் திருப்பதி மாநில நிர்வாகி வெற்றிவேல் ஒன்றிய கவுன்சிலர் ஆதிராஜா கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மன் கலையரசி கண்ணன் உட்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.