உத்தரபிரதேசத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு

 

 

உத்தரபிரதேச மாநிலத்தில் தலைநகர் லக்னோ, லக்கிம்பூர் கேரி உள்ளிட்ட 59 சட்டமன்ற தொகுதிகளுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் 407 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் 3 கட்ட தேர்தல் வாக்குபதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 4 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 9 மாவட்டங்களை உள்ளடக்கிய 59 சட்டமன்றத் தொகுதிகளில் 624  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதேபோல், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் பன்பீர்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!